
அருள்மிகு
மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரைக் திருக்கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் ஆயிங்குடி கிராமம் அருள்மிகு மங்களநாயகி உடனுறை அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரைக் திருக்கோயில்
வரலாறு
மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட அருள்மிகு மங்களநாயகி உடனுறை அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் பின்னர் பல்லாண்டுகளாக ராயவரம் பாடசாலையார் வீடு என அழைக்கப்படும் சா.த.க குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் அழகான திருக்கோயில். ராயவரத்தில் வேத பாடசாலை நிறுவி ஆன்மீகப் பணியாற்றிய குடும்பம் சா.த.க குடும்பம். இன்றும் செம்மையாக நிர்வகிக்கப்பட்டு வரும் கோவில் அருள்மிகு மலைக்கொழுந்தேஸ்வரர் திருக்கோவில்.