
மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரைக் கோயில்
அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரைக் திருக்கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் ஆயிங்குடி கிராமம் அருள்மிகு மங்களநாயகி உடனுறை அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரைக் திருக்கோயில்
வரலாறு
மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட அருள்மிகு மங்களநாயகி உடனுறை அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரைக் திருக்கோயில் பின்னர் பல்லாண்டுகளாக ராயவரம் பாடசாலையார் வீடு என அழைக்கப்படும் சா.த.க குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் அழகான திருக்கோயில். ராயவரத்தில் வேத பாடசாலை நிறுவி ஆன்மீகப் பணியாற்றிய குடும்பம் சா.த.க குடும்பம். இன்றும் செம்மையாக நிர்வகிக்கப்பட்டு வரும் கோவில் அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்.
மிகவும் பழமை வாய்ந்த குடைவரை கோவிலில் சுவாமி எண்கோண வடிவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
திருத்தலத்தில் சுவாமி அக்னி ரூபமாக ரிஷிகளுக்கு காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
குடைவரைக்குள் சுயம்பு மூர்த்தியாக ஈஸ்வரன் திகழ்கிறார்.
கோவிலின் இன்னொரு சிறப்பு தென்கிழக்கு பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள சுணை. சுட்டெரிக்கும் கோடையிலும் வற்றி விடாத அரும் சுணை.
சுணை நீர் அபூர்வமான தீர்த்தம் மட்டுமல்ல, பிரசவிக்கும் பெண்களுக்கு அமைந்த அரிய தீர்த்தம் பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் அமைவதற்கு இத்தீர்த்தம் நல்மருந்தாய் நலம் கூட்டுகிறது.
இக்கோவிலின் தலவிருட்சம் நார்த்தமரம்.
தவக்கோலத்தில் தனி சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழா மாசி மகத் திருவிழா.
அதனைத் தொடர்ந்து நவராத்திரி உற்சவம், சுவாமி அம்பு போடுதல், தேய்பிறை அஷ்டமி பைரவர் அபிஷேகம், கார்த்திகை தீப பஞ்சமூர்த்தி புறப்பாடு, சிவராத்திரி வழிபாடு, மாதம் தோறும் தேய்பிறை பிரதோஷம், கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேகம் என்று ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெறுவதும் பக்தர்கள் பங்கேற்று ஆன்மீகப் பணி செய்வதும் அற்புதமான நிகழ்வுகள் ஆகும்.
குடமுழுக்கு விழா வேலைகள் தொடங்கி இருக்கும் இப்பழமையான திருக்கோவில் பணியில் ஆன்மீகச் செல்வர்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும்; பங்களிக்க வேண்டும். “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்ற மாணிக்கவாசகப்பெருமானின் வார்த்தைகளில் அவன் அருள் வேண்டி அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா பணியில் ஈடுபட ஈசன் அருள் அமைவது ஆகுக.